செய்தி விளையாட்டு

Women’s T20 WC – இலங்கையை வீழ்த்திய இந்திய அணி

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.

தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார்.

ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி