இலங்கை செய்தி

கோதுமை மாக்கான இறக்குமதி வரி நீக்கம்

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக,நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஜனவரியில் கோதுமை மா மாவுக்கான சுங்க இறக்குமதி வரி கிலோவுக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிதாக எடுக்கப்பட்டுள்ள முடிவை நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர், மாதம் அப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு நடைமுறையில் இருந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரியை, வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் என்ற விசேட பண்ட வரியாக மாற்றியது.

இந்நிலையில், இந்த வரி விலக்கு நீக்கப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை