ஐரோப்பா

ஸ்பெயின் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை : நூதனமாக ஏமாற்றப்படும் மக்கள்!

ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் நூதனமான முறையில் ஏமாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிய தீவான டெனெரிஃப் தீவுகளுக்கு பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர்.  2022 இல் மட்டும் 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்குள்ள கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் விரும்பி செல்வதுடன், அங்கு பல்வேறு ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக அப்பகுதிகளில் பிக்பொக்கெட் தொழில் ஈடுபடுவர்கள் மக்களை அச்சுறுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழிகாட்டியை போல் ஏமாற்றி பொருட்களை கொள்ளையிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவ்வாறான இடங்களுக்கு செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்