ஐரோப்பா

வரலாறு காணாத மழை: ஸ்பெயின் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி ஆஸ்கார் புவென்ட்டே தெரிவித்துள்ளார்.

இதில் வேலன்சியா நகரத்தில் 215 பேரும், காஸ்டில்-லே மாஞ்சா பகுதியில் 7 பேரும், அந்தலூசியா நகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 48 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன 78 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்பெயில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 5 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ள பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்