ஐரோப்பா

பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் – 21 பேர் பலி!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது

இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள்,டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மீது உக்ரைன் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ரஷ்யாவின் பெல்ஹொரட் நகர் மீது உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 110 பேர் படுகாயமடைந்தனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்