ஐரோப்பா

உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா : சீனா எச்சரிக்கை

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சீனா ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கூற்றை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அசோவ் கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்வதற்கும், மொஸ்கோ ஆக்கிரமித்துள்ள கிரிமியாவைத் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரத்தின் முதல் நான்கு நாட்களில், கிரிமியாவுக்கு எரிபொருள் வழங்க முயன்ற 32 “நிழல் கப்பற்படை” எரிபொருள் கப்பல்கள் மற்றும் இரண்டு உலர் சரக்குக் கப்பல்கள் உட்பட குறைந்தது 36 ரஷ்யக் கப்பல்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கீவ்வின் இந்தத் தொடர்ச்சியான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யா முழுவதும் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இதனால் அங்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்