ஐரோப்பா

UK – மான்செஸ்டரில்  தீவிபத்தால் உயிரிழந்த குழந்தை : பெண் ஒருவர் கைது!

பிரித்தானியா –  மான்செஸ்டரில்  வீடொன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.35 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்lதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் துரதிஷ்ட வசமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் 44 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்