இலங்கை

திருமலை – நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறை… சிரமங்களுக்கு உள்ளாகும் நோயாளர்கள்

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பாவனைக்காக 12 நோயாளர் காவு வாகனங்கள் இருந்தும் தற்போது 3 வாகனங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நோயாளிகளை மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் நோயாளிகள் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த சில மாதங்களாக ஒரு வாகனம் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 3 வாகனங்கள் மாத்திரமே நோயாளர்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் குறித்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள் முற்றாக பாவிக்க முடியாத நிலையில் இருப்பதோடு ஏனைய 7 வாகனங்களும் திருத்த வேலைக்காக வேலைத்தளங்களிலும், வைத்தியசாலை வளாகங்களிலும் நீண்டகாலமாக தரித்து நிற்பதாகவும் தெரிய வருகின்றது.

வைத்தியசாலையின் முறையற்ற நிர்வாகம் மற்றும் பராமரிப்பு காரணமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பல இலட்சம் ரூபா செலவு செய்து திருத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் சில நாட்களிலேயே மீண்டும் திருத்த நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மருந்துகளை ஏற்றி வருகின்ற வாகனம்கூட தற்போது வைத்தியசாலையில் இல்லாத நிலை காணப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்