இலங்கை

வனப்பகுதியில் மூன்று நாட்களாக ஆடையின்றி திரிந்த பெண்!மீட்ட பொலிஸார்

கம்பளை அம்புலுவா சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்துள்ளனர்.

அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்