செய்தி

வவுனியா மாவட்ட கூட்டத்தில் தனிச்சிங்களம்: ரவிகரன் எம்.பி. கடும் சீற்றம்!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

இதனால் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே , இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் இடித்துரைத்தார்.

அத்துடன், தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரினார்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ் மொழிமூலமான மொழிபெயர்ப்புக்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

விஜயரத்தினம் சரவணன்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி