வடக்கு, கிழக்கில் யுத்த விதவைகள்: தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி
“தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் பெண்களுக்கான வாழ்வாதாரம், […]













