ஜெர்மனியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் : ரயில் நிலையங்களே குறி!
ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மற்ற இடங்களை விட ரயில் நிலையத்தில் அதிகளவிலான வன்முறை நிகழ்வதாக குற்றவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபிராங்க்பர்ட் (Frankfurt) ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள், அதன் அண்டைப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள், ஆனால் […]




