பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றம் : அச்சுறுத்தலில் உயிரினங்கள்!
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக கடலடி இரண்டு மீட்டர்வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக பவளப்பாறைகள் வெளிப்பட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்ல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, “கடலோர உயர்வு” ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபாட்டோ (Cotabato) அகழியின் நகர்வு கடற்கரைப் பகுதிகளை மேல்நோக்கித் தள்ளியுள்ளது. இதன் விளைவாக, முதலில் நீரில் மூழ்கியிருந்த கடலின் அடிப்பகுதி வெளிப்பட்டுள்ளது” என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே […]



