அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் 55 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். “அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31 ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி கூறினார். டித்வா […]

இலங்கை செய்தி

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!

  • January 8, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது. ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் […]

அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் சுகாதார துறைக்கு ரூ. 21 பில்லியன் இழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக […]

அரசியல் இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!

  • December 27, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (27) சுட்டிக்காட்டினார். எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]

error: Content is protected !!