ஐரோப்பா

மொரோக்கோ அணியின் தோல்வி : லண்டனில் கலவரம் வெடிப்பு

FIFA  கால்பந்தாட்ட போட்டியில் மொரோக்கோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் லண்டனில் கலவரம் வெடித்துள்ளது.

மொரோகோ அணி இரசிகர்கள் லண்டனின் எட்ஜ்வேர் சாலையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது தீபந்தங்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கிருந்த பல பொருட்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன.

மேலும்  பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அந்த அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இதற்குப் பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, சமூக ஊடகங்களில் பரவி வரும் சிசிடிவி மற்றும் காணொளிக் காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்