இலங்கை செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?

  • January 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. “ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் […]

இலங்கை செய்தி

உலக பொருளாதார மாநாடு 19 ஆம் திகதி ஆரம்பம்: பிரதமர் ஹரிணி பங்கேற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற World Economic Forum மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர். குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். முதலீட்டு […]

இலங்கை செய்தி

16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங். இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

22 ஆம் திகதி இலங்கை வருகிறது IMF குழு!

  • January 13, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) குழவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொடர்பில் 5ஆவது மீளாய்வு கூட்டத்துக்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரியவருகின்றது.

இலங்கை செய்தி

8 நாட்களுக்குள் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 8 நாட்களுள் மாத்திரம் 67 ஆயிரத்து 762 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 8 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 367 பேரும், ரஷ்யாவில் இருந்து 8 ஆயிரத்து 425 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை […]

இலங்கை செய்தி

அநுர அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியது சீனா: வெளிவிவகார அமைச்சர் கூறியது என்ன?

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இன்று (12) பயணம் மேற்கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் Vijitha Herath இரு தரப்பு பேச்சில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டே சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை […]

இலங்கை செய்தி

“பலாலி விமான நிலையத்தில் நவீன ஸ்கேனர்”

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் , இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, இரண்டு உயர் தொழில்நுட்ப “ஸ்கேனர்”கள் வழங்கப்பட்டன. காங்கேசன்துறை துறைமுகத்தில் இதற்குரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் “ஸ்கேனர்”களை கையளித்தார். சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காகவே மேற்படி ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனா துணை நிற்கும்!

  • January 12, 2026
  • 0 Comments

கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை நேரப்படி இன்று காலை நாட்டுக்கு வந்த சீன வெளிவிவகார அமைச்சருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சீன தூதுரக அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் […]

இலங்கை செய்தி

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்து டெல்லி கழுகுப்பார்வை!

  • January 11, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் டெல்லி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi இன்று மாலை அல்லது நாளை இலங்கை வருகின்றார். கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார். இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய […]

error: Content is protected !!