இலங்கை

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் கத்திகுத்து சம்பவம்!

பதுளை – முத்தெடுவேகம இடையே இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் இன்று (25) மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது, காயமடைந்த லங்கம ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பேருந்தின் சாரதி, லங்கம பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, லங்கம ஊழியர்கள் குழுவொன்று தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்