இலங்கை செய்தி

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் இன்று – முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்

பத்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெறுகின்றது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு பத்து மணியின் பின்னர் தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரதான வாக்களிப்பின் முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் நள்ளிரவின் பின்னர் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை