இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி

2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் சஜித் பிரேமதாசவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா குமார திசாநாயக்க இருப்பார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைத்து, கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்