இலங்கை செய்தி

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை சந்தித்தார்.

உத்தியோகபூர்வ அரசு வரவேற்பு விழாவிற்குப் பிறகு, இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர்.

“எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, அத்துடன் தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது” என்று ஜனாதிபதி திசாநாயக்க பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித் ஹேரத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை