இலங்கை

இலங்கை : IMF பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி : முக்கிய இலக்குகள் குறித்து கலந்துரையாடல்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க X செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டக்கூடிய சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தை தாம் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி கூறுகிறார்.

சிறுவர் வறுமை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைத் தீர்ப்பது, விசேட தேவையுடையோருக்கு ஆதரவளிப்பது மற்றும் கடுமையான சீர்திருத்தங்களின் ஊடாக ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பன தமது இலக்குகளாகும் என ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்