இலங்கை செய்தி

இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.

நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன.

இந்தநிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை