ஆசியா செய்தி

இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் தலைவர்கள்

இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தனது கடிதத்தில், திரு திசாநாயக்கவின் தேர்வு, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்ததைத் தெரிவித்துள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

தர்மன் தமது வாழ்த்துக் கடிதத்தில், “சிங்கப்பூரும் இலங்கையும் அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பாலும் நெருங்கிய மக்கள் உறவாலும் நீண்டகால, நட்பார்ந்த உறவை அனுபவித்து வந்துள்ளன. 2025ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 55 ஆண்டுகால அரசதந்திர உறவை நினைவுகூரும் வேளையில், இரு தரப்புக்கும் இடையிலான உறவவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமது வாழ்த்துக் கடிதத்தில் பிரதமர் வோங், “சிங்கப்பூரும் இலங்கையும் குறைவான கரிம வெளிப்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருமித்த ஆர்வங்களைக் கொண்டுள்ளன. நாம் பலதரப்பு அமைப்புகளில் நன்றாக ஒத்துழைக்கிறோம். இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், காமன்வெல்த் அமைப்பு ஆகியவற்றின் சக உறுப்பினர்களாக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரும் இலங்கையும் 2025ஆம் ஆண்டில் அரசதந்திர உறவுகளை நிறுவி 55 ஆண்டுகள் நிறைவடையும் என்றும் கூறிய வோங், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

70 ஆண்டுகளில் 2022 ஏப்ரலில் மிக மோசமான பொருளியல் தாக்கத்தால் நொடித்துப்போன நிலைக்குத் தளப்பட்ட இலங்கையின் ஆகக் கடைசி அதிபர் தேர்தலை செப்டம்பர் 21ஆம் தேதி நடத்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி