இலங்கை

விமான ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை : ஆபத்தில் உள்ள பயணிகள் – சஜித் எச்சரிக்கை!

நாட்டில் விமான ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23.06) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 6 மாதக் காலப்பகுதியில்,   ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் விமான ஓட்டுனர்கள் 70 பேர் நீங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் தற்போது 260பேருக்கும் குறைவான விமான ஓட்டுனர்களே இருக்கின்றனர். இந்த வருடத்தில் மேலும் 18பேர் செல்ல இருக்கின்றனர். தற்போது 260 பேர் மாத்திரமே இருக்கிறார்கள்.

அதனால் சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.  சுற்றுலா சமயத்தில் தற்பாேது இருக்கும் விமானிகளின் ஓய்வு நேரத்தை சுருக்கி,  அவர்களை சேவைக்கு ஈடுபடுத்துவார்கள்.

அதன் காரணமாக விமான பயணிகளின் உயிர் ஆபத்துக்கும் இடமிருக்கிறது. அதனால் விமான ஓட்டுனர்களின் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்