ஐரோப்பா

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – லண்டனில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள ஈழத்தமிழர்!

பிரான்ஸில் குழந்தை ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஜந்த் கேதீஸ்வரராசா என்ற 30 வயதுடைய ஈழத்தமிழர் ஒருவர் மேற்படி  குற்றச்சாட்டின் கீழ்  லிவர்பூல் (Liverpool) நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அவரை தேடி வருவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அவர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில்    முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது நாடு கடத்தல் செயன்முறை தொடங்கும் வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் வரும்  27 ஆம் திகதி (வியாழக்கிழமை)  வீடியோ இணைப்பு மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

மேலும் குறித்த வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை    2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்