பால்டிக் நாடுகளின் எல்லையில் ரஷ்ய போர் விமானம் : இடைமறித்த நேட்டோ விமானம்!
விமானப் பயண விதிமுறைகளை மீறிய ரஷ்ய விமானமொன்றை இடைமறிப்பதற்காக பால்டிக் நாடுகளின் எல்லைகளுக்கு அருகிலுள்ள வான்வெளிக்கு நேட்டோ போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
லிதுவேனியா தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ரஷ்ய விமானங்களை அடையாளம் கண்டு இடைமறிப்பதற்காக, ஏப்ரல் 13 முதல் 19 வரை நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நேட்டோ கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உக்ரைன் – ரஷ்யா போரில் ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்ய போர் விமானங்கள் அவ்வவ்போது வான்வெளியை மீறி வருகின்றன.
அதேநேரம் கடல் வழியிலும் சில போர் கப்பல்கள் அத்துமீறுவதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேட்டோ படைகள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





