அரசியல் இலங்கை செய்தி

சுற்றுலாசென்ற அரசியல்வாதி துப்பாக்கியுடன் கைது!

“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர,Premalal Jayasekara நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இந்நிலையில் அவிசாவளை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த தரப்பினருடன், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கை துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளது.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக நுவரெலியா பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!