ஐரோப்பா

உக்ரைனுக்காக பணியாற்றிய 08 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய ரஷ்யா!

ரஷ்யா – உக்ரைன் போரில் கிரிமியா (Crimea) பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இன்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU என அழைக்கப்படும் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை முன்னெடுத்தது.

அப்போது இந்த குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஆர்மீனிய குடிமக்கள் உட்பட எட்டு பேர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் மேலும் ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குறித்த லொறி வெடிபொருட்களை எடுத்துச் சென்றது தங்களுக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில்  SBU இன் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வாசில் மாலியுக், 2023 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், தானும் மற்ற இரண்டு “நம்பகமான ஊழியர்களும்” தாக்குதலைத் தயாரித்ததாகவும், அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்களைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் உக்ரைனுடனான போரில் கிரெம்ளின் படைகளுக்கு முக்கிய விநியோக பாதையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்