ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மண் மூலம் பரவும் அரிதான நோய் : குயின்ஸ்லாந்தில் ஒருவர் பலி!

ஆஸ்திரேலியாவில் அரிதான ஆனால் ஆபத்தான மண் மூலம் பரவும் நோயான மெலியோய்டோசிஸால் வடக்கு குயின்ஸ்லாந்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டு டவுன்ஸ்வில்லே பகுதியில் பதிவாகிய ஆறாவது மரணம் இதுவாகும்.  அதேநேரம் கெய்ர்ன்ஸ் பகுதியில் இந்த நோய் தாக்கத்தால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெப்பமண்டல நோய் மண் மற்றும் சேற்றில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் கனமழை காலங்களில் தூண்டப்படுகிறது.

டவுன்ஸ்வில்லே பொது சுகாதாரப் பிரிவு இயக்குனர் ஸ்டீவன் டோனோஹூ கூறுகையில், சுமார் ஒரு டஜன் நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெலியோய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்த முதியவர்கள் பெரும்பாலும் உயிர்பிழைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித