அரிய ரோமானியப் பதக்கம் – முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு!
சிற்றுருவக் கலைப்படைப்பு என வர்ணிக்கப்படும் அரிய ரோமானியப் பதக்கம் ஒன்று, முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
2022-ல் மிட்லோதியனில் (Midlothian) உள்ள வயல் ஒன்றில் இருந்து இந்த கருவி கண்டறியப்பட்ட இந்த வெண்கலக் கலைப்பொருள், கி.பி. 100-160 காலகட்டத்தைச் சேர்ந்து என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வடக்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பதக்கம், ரோமானிய உலகத்தால் ஒரு உள்ளூர் தலைவருக்கு அந்தஸ்து மற்றும் ஆதரவின் சின்னமாக வழங்கப்பட்ட பரிசாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இது, எடின்பரோவில் உள்ள ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் நவம்பர் மாதம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.




