உலகம்

ஈரானில் 05ஆவது நாளாக தொடரும் போராட்டம் – முடியாட்சியை மீள கோரும் மக்கள்!

ஈரானில் வாழ்க்கைச் செலவு  அதிகரித்து வருகின்றமையால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் (Lordegan) நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்னாவில் (Azna) மேலும் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் (Kouhdasht) ஒருவர் கொல்லப்பட்டதாகவும்  ஃபார்ஸ் (Fars) செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன.

நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், முடியாட்சியை மீள வலியுறுத்தியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்