Site icon Tamil News

இளமையில் மிஸ் ஆனதை ஆன்டியானது அனுபவிக்கத்துடிக்கும் தயாரிப்பாளர்… கடுப்பான நடிகை

ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக வலம் வந்த நடிகை இடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு நடிப்பே வேண்டாம் என்று அவர் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால் நடிகை ஹீரோயினாக ஜொலித்த காலத்தில் அவருக்கு ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்தது. அதனாலேயே அவர் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கினார்.

சில வருடங்களுக்கு பிறகு நட்பின் அடிப்படையில் சில படங்களில் நடித்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்ட ஆரம்பித்தன. சரி இப்போது தான் நமக்கு வயதாகிவிட்டது.

இனி இது போன்ற தொல்லை இருக்காது என அவரும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நடிகை ஹீரோயினாக நடித்த காலத்திலேயே பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு அவர் மீது ஆசை இருந்திருக்கிறது.

அப்போது அவரிடம் சிக்காமல் நடிகை எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால் இப்போது தன் ஆசையை தீர்த்துக் கொள்ளலாம் என அவர் நடிகையிடம் மறைமுக தூது விட்டிருக்கிறார்.

இது என்ன பெரிய தலைவலியா போச்சு என நடிகை தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். ஆனால் தயாரிப்பாளரோ யாரும் இல்லாத நேரம் பார்த்து நடிகையின் வீட்டுக்கு சென்று தன் தேவையை கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பான நடிகை இதுக்கு மேல என்னை டார்ச்சர் செய்தா உங்களுக்கு மரியாதை கிடையாது என லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். இதனால் வேறு வழியில்லாத தயாரிப்பாளர் முகத்தை தொங்க போட்டபடி திரும்பி இருக்கிறார்.

ஆனால் இந்த சம்பவத்தால் நடிகை ரொம்பவும் மனம் உடைத்து போயிருக்கிறார். அதை தொடர்ந்து அவர் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

 

Exit mobile version