இலங்கை

எதிர்வரும் 2ம் திகதி அவசரமாக கூட்டப்படவுள்ள பாரளுமன்றம்

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது.

ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்படுகிறது.

ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை வழங்குவதற்காக பாராளுமன்றம் அழைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.அன்றைய தினம் நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதாரம் சீர்குலைந்தமைக்கான நிலை போன்றவை குறித்து அவர் அறிக்கை வெளியிட உள்ளார்.

பாராளுமன்றம் வழமை போன்று 9ஆம் திகதி கூடவிருந்தது. பாராளுமன்றம் எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூடவுள்ளதாக அனைத்து பாராளுமன்றம் உறுப்பினர்களுக்கும் அறிவிக்கும் பணிகளில் பாராளுமன்றம் ஈடுபட்டுள்ளது.

மேலும், 2ம் திகதிக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவு செய்ய, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம், 28ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்