போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் அவசர கோரிக்கை!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இருவாரகால தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) நிறைவடையும் நிலையிலேயே இந்த அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருடன் Natalie A. Baker இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq Dar இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதன்மூலம் நிரந்தர அமைதிக்கு வழி பிறக்கும் என பாகிஸ்தான் நம்புகின்றது.





