ஆசியா செய்தி

2 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரியா

வட கொரிய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

வடகொரியாவின் சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் சீனாவால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 500 வட கொரியர்களில் 39 வயதான ரி மற்றும் 43 வயதான காங் என இருவரும் அடங்குவர்.

இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது வெளியில் உள்ள சந்தையில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், ரி மற்றும் காங் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இருவர் செய்த குற்றம் தொடர்பாக ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நீடித்தது.

அன்றைய நாள் காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை, அதே நாளில் ஹம்கியோங் மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இரண்டு பெண்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி