ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் விமானச் சேவைகள் ரத்து

நியூசிலாந்தின் வடக்குத் தீவிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயிட் தீவு எரிமலை ஆகஸ்ட் 22ஆம் திகதியன்று வெடித்தது.இதையடுத்து, எரிமலையிலிருந்து பேரளவிலான சாம்பல் வெளியேறியது.இதன் காரணமாக நியூசிலாந்தில் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எரிமலை வெடிப்பு, அதிலிருந்து சாம்பல் வெளியேறுவது அடுத்த சில வாரங்களிலிருந்து மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வயிட் தீவு எரிமலை 2019ஆம் ஆண்டில் வெடித்தபோது 22 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதியன்று அந்த எரிமலை வெடித்ததை அடுத்து, ஏர் நியூசிலாந்தின் பத்து விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

விமானப் பயணப் பாதையை எரிமலைச் சாம்பல் மறித்ததால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சாம்பல் கலைந்ததும் விமானச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாக ஏர் நியூசிலாந்து கூறியது.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித