இலங்கை

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

இதனையடுத்து கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், என்றும் ராஜா ராஜாதான் என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள்.

அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியினை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்