ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிரான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம்  பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் அனுமதி பொரிஸ்  ஜோன்சனுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவி வகித்தபோது கொவிட்19 பரவல் தடுப்பு விதிகளை மீறி கன்சர்வேட்டி கட்சி வளாகத்தில், ஊழியர்களுக்கு விருந்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமான வீடியோக்களும் அண்மையில் வெளியாகியது.

இவ்விடயம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற குழுவானது, விருந்துபச்சாரங்கள் நடத்தப்பட்டதை உறுதி செய்து அவரை பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு சிபாரி செய்தது.

இந்நிலையில் பாராளுமன்றக் குழுவின் அறிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில். 354 எம்பிகள் ஆதரவாகவும், 7 மாத்திரம் எதிராகவும் வாக்களித்தனர்.

மேலும் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 225 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முன்னதாக பொரிஸ் ஜோன்சன் கடந்த 9 ஆம் திகதி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்