இலங்கை

யாழில் வீடொன்றில் திருடு போன 135 பவுணுக்கும் அதிகமான தங்கநகைகள்

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருட்டு போயுள்ளது.அந்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை. இந்நிலையில் தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பின்னர் நகைகளை பார்த்த போதே நகைகள் திருட்டு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு, கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்