இலங்கை

ஹட்டனில் ஒருதொகை ID-க்களுடன் ஒருவர் கைது

ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளை அவர், தம்வசம் வைத்திருந்துள்ளார்.ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், வங்கி அட்டைகளை ஆகியவற்றை பிணையாக வைத்துக்கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரென விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெருவிரல் அடையாளம் வைக்கப்பட்டுள்ள வெற்றுக்கடதாசிகள் சில, அது மட்டுமன்றி, கையொப்பம் இடப்பட்டுள்ள கடதாசிகள் உள்ளிட்ட ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய அடையாள அட்டை காணாமல் போவது தொடர்பிலான ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு நாளாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணைகளின் போதே, இந்த வர்த்தகம் அம்பலமானது.

அதனையடுத்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய, சந்தேக நபரின் வீட்டை சோ​தனைக்கு உட்படுத்திய போதே, ஒரு தொகை தேசிய அடையாள அட்டை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்