இலங்கை

லொறியொன்று மரம் மீது மோதி விபத்து -12 பேர் படுகாயம்!!

ஆனமடுவ பகுதியில் சரக்கு லொறியொன்று மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னருவவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முனேஸ்வரம் கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வாகனத்தில் 13 பேர் பயணம் செய்த நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பொலன்னருவவின் அரலகன்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை லொறி  ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது உறங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆனமடுவ பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்