விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜன.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, ” நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. இருப்பினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ