இலங்கை

இலங்கையர்களுக்கு டுபாயில் வேலை வாய்பு – 2 ஆண்டுகள் பெண் செய்த மோசடி

Rear view of a sad man looking at a plane taking off and missing his flight at airport.

இலங்கையர்களுக்கு டுபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் டுபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அம்பாறை, பதுளை மற்றும் பிபில உள்ள பல்வேறு பிரதேசங்களில் 37 நபர்களிடமிருந்து 02 கோடியே 12 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபரான பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்