இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இளைஞர் கட்டுநாயக்காவில் கைது

போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த இளைஞன் நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணிப் பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலியாகத் தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் நுழைவுச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இளைஞன் இந்த போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை