இலங்கை

ரணிலின் அடுத்தக்கட்ட அரசியல் திட்டம் குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யானை மற்றும் மொட்டு சின்னம் அல்லாத புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என குறிப்பிட்டார்.

இதேவேளை, யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் போது அதே பிரச்சினை ஏற்படும் எனவும், தற்போதைய ஜனாதிபதி புதிய கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்