செய்தி

ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு சுங்கவரி: ஈரான் புதிய திட்டம்!

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய நடைமுறையானது, பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பையும் வருவாயையும் இலக்காகக் கொண்டுள்ளது.

போர்க்காலச் சூழலால் இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை ஏற்கனவே பெருமளவு குறைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்களில் கணிசமான பகுதி இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், ஈரானின் இந்த அதிரடி முடிவு உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி