ஐரோப்பா செய்தி

இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது – பிரதமர் ரிஷி சுனக்

இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்  தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பொது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

பகவத் கீதையை வைத்து,  நாடாளு உறுப்பினராக பதவியேற்றதில் நான் பெருமை அடைகிறேன். நமது கடமையை உண்மையாகச் செய்ய வேண்டும். இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது.

இதை என் அன்பான பெற்றோர் எனக்கு கற்று கொடுத்து வளர்த்தனர். தற்போது நான் என் பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்கிறேன். பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது.

ஒரு பிரித்தானிய-ஆசியப் பிரதம அமைச்சரை பெற்றிருப்பதன் பெருமையை நான் அறிவேன், மேலும் உங்களை ஒருபோதும் வீழ்த்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.” என்றார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி