செய்தி விளையாட்டு

INDvsENG – நான்காம் நாள் முடிவில் 137 ஓட்டங்கள் பின்னிலையில் இந்திய அணி

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து கே.எல்.ராகுலுடன் கேப்டன் சுப்மன் கில் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி