இந்தியா

இந்தியா : ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், அரசுப்பணிகளை கையாளும் வகையில் தங்கள் வங்கிக் கிளைகளை 2023-24 நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 ஆம் திகதி திறந்து இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை, ஆனால் வருமான வரி தொடர்பான பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் மார்ச் 31 ஆம் திகதி வங்கிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அடங்கும்.

மேலும், தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டிசிபி வங்கி, பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிஆகிய வங்கிகளும் மார்ச் 31 ஆம் திகதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே