செய்தி தமிழ்நாடு

சட்ட விரோத மீன்பிடி – தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிமை அதிகாலை மன்னார் மாவட்ட கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் படகிலிருந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நாளை அமுல்படுத்தப்பட உள்ள நிலையில், இறுதி நாள் கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது இராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!